
கலியுக கர்ணனான ரத்தன் டாடா: தனது பணியாளர்களுக்கும் சொத்தில் பங்கு
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட அவரது மொத்த சொத்துகளின் மதிப்பு 4 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதியிருந்தார்.
அவர், ‘அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் , ஒன்றுவிட்ட சகோதரிகள் ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி எழுதியிருந்தார். தற்போது ரத்தன் டாடாவின் இரண்டு சகோதரிகள், அறங்காவலர் டேரியஸ் ஆகியோர் அவரது உயிலை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிலை நிறைவேற்ற தங்கள் நேரத்தையும், முயற்சியையும் அர்ப்பணித்ததற்காக அவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா பாராட்டு தொகையாக வழங்கப்பட்டது.
தற்போது, ரத்தன் டாடாவின் நண்பருக்கு 6.16 கோடி ரூபா பெறுமதியான சொத்தையும், மூன்று துப்பாக்கிகளையும் பெறுவதோடு ரத்தன் டாடாவின் இரண்டு சகோதரிகளும் அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் தனது உயிலில் தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு 3 கோடிக்கும் மேலான சொத்துக்களை ஒதுக்கி வைத்துள்ளார்.
7 வருடம் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 15 லட்சம் வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர்களுடைய சேவை காலத்திற்கு ஏற்ப இந்த தொகை பகிர்ந்தளித்து வழங்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்