கலிப்சோ ரயில் சேவையை தெமோதரை வரை முன்னெடுக்கத் தீர்மானம்
சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு நானுஓயாவில் இருந்து தெமோதரை வரை கலிப்சோ ரயில் சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் கலிப்சோ ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ரயில் சேவையானது பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த ரயில் சேவையினை நானுஓயாவில் இருந்து தெமோதரை வரை முன்னெடுப்பதற்குத் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
