கலாசாலையில் இடம்பெற்ற பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்-

45 ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இசுறுபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் திருமதி ஸ்ரீமா திசாநாயக்க கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திக்கான பணிப்பாளர் டபிள்யு.ஜு.எஸ். குமார, நூலகத்திற்கான பணிப்பாளா் , சரத் நந்தகுமார, கொட்டக்கல ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சு.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் கம்பஹா ஆசிரிய மத்திய நிலைய விரிவுரையாளர்கள் எம்.ஏ.எம்.ரிப்தி, எம் டபிள்யு.எம் ரப்சி ஆகியோரும், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகப்பிரிவு உத்தியோகத்தர;களான அனந்த சந்திரகுமார, டிலினி சத்துரிகா, சேர்மிளா தமயந்தி, உதார சஞ்சய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கலாசாலையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது. தொடர;ந்து ராஜீத் குழுவினரின் மங்கல நாதஸ்வர இசையுடன் குடை, ஆலவட்டங்கள் முதலிய மங்கல பொருட்கள் சகிதம் வரவேற்பு ஊர;வலம் இடம்பெற்றது.

தேசியக்கொடி, கலாசாலைக்கொடி என்பன ஏற்றப்பட்டமையைத் தொடர்ந்து சரஸ்வதி சிலைக்கான வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
அடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் இசைக்கப்பட்டது.

கலாசாலையின் பிரதி அதிபர் க.செந்தில்குமரன் வரவேற்புரை ஆற்றினார். கலாசாலை அதிபர் தலைமையுரை ஆற்றினார் தொடர்ந்து பிரதம விருந்தினர் கொஞ்சும் தமிழில் தனது உரையை ஆற்றி சபையோரை மகிழ்வித்தார்.

தொடந்து கலாசாலையின் 102 ஆவது கல்லூரி நாளை அடையாளப்படுத்தும் வகையில் கேக் வெட்டப்பட்டது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் கேக்கை வெட்டினார்.

தொடந்து விருந்தினர்களுக்கான கௌரவம் இடம்பெற்றது. கலாசாலை முகாமைத்துவ குழுவினர் பொன்னாடை போர;த்தி கௌரவிக்க அதிபர் நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

அதனை அடுத்து 45 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அவர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் பிரதிகள் கையளிக்கப்பட்டன.

சான்றிதழ் வழங்குவோருக்கான பெயர்ப்பட்டியலை பிரதி அதிபர் த.கோபாலகிருஷ்ணனும் மாணவர் மன்றக் காப்பாளர் திருமதி சிவலோசனி சுரேந்திரனும் முன்னிலைப்படுத்தினார்.

சான்றிதழ் பெற்ற ஆசிரியர;கள் சார்பில் இரண்டாம்மொழி தமிழ் கற்கைநெறியைப் பயின்ற ஆசிரியர் புத்திஹா சுதர்சினி வீரமலை ஏற்புரையையும் நன்றியுரையையும் ஆற்றினார்.

நிகழ்வுகளை இரண்டாம் வருட ஆங்கில கற்கைநெறி ஆசிரிய மாணவி திருமதி தர்மினி சம்பத்குமார் முன்னிலைப்படுத்தினார்.