கற்கோவளம் உணவு முரண்பாடு: கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் இன்று புதன் கிழமை பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு இடம்பெற்றது.
இதன்போது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு முன்வைத்த விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கற்கோவளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உணவு கோரியவேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த கிராமசேவகரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கு இடம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
