
கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு
வென்னப்புவ, வைக்கலா கடற்கரையில் பகுதியிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது சிறுவனுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் பெண்ணொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலமா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
