கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதம்

கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை  தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த இலக்கம் 311 அஞ்சல் புகையிரதம் அம்பலாங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறினால் பழுதடைந்துள்ளது.

இதனால் கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.