கரைச்சி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

-கிளிநொச்சி நிருபர்-

பசுமைப்பூங்கா சந்திரன் பூங்காவாக மாற்றம் சபையில் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிப்பு

கரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது.

சபையின் தீர்மானம் தொடர்பாf பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் njuptpf;ifapy;

கிளிநொச்சி சேவை சந்தையில் தற்காலிக கொட்டகைகளில் வியாபாரம் நடாத்தி வரும் வர்த்தகர்கள் 72பேருக்கான கடைத்தொகுதி அமைப்பதற்காக 120 மில்லியன் ரூபா விடுவிக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, தேர்தலுக்கு முன்பு வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முரசுமோட்டை பகுதியில் பிரதேச சபையின் புதிய உபஅலுவலகம் நிர்மாணிப்பதற்கு 20மில்லியன் ரூபா விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிளிநொச்சி நகரத்தில் மின் தகன மயானம் புலம்பெயர்ந்தோர் மற்றும் கிளிநொச்சி வர்த்தகர்களின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டு இறுதி வேலைகள் மேற்கொள்வதற்காக 15மில்லியன் ரூபா விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசுமைப்பூங்காவை சந்திரன் பூங்காவாக.பெயர் மாற்றுவது தொடர்பாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 15 வேலைத்திட்டங்களுக்குமான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது, என தெரிவித்தார்