கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்

கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்

கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்

🟤உலகளவில் பெண்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் கருப்பை புற்றுநோய். இது மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான புற்றுநோயாகும். என்ன தான் நமது மருத்துவ உலகில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு நோய் வந்து அதை சரிசெய்ய முயற்சிப்பதை விட, அந்நோய் வராமல் தடுப்பதே எப்போதும் சிறந்தது. அதற்கு ஒரு நோய் எப்போது வருவதற்கான வாய்ப்புள்ளது மற்றும் எந்த காரணங்களால் ஒருவருக்கு வரும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

🟤பெண்கள் நிறைய பேருக்கு கருப்பை புற்றுநோய் குறித்து தெரிவதில்லை. இந்த கருப்பை புற்றுநோயானது 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

🟤கருப்பை புற்றுநோயும் ஒருசில அறிகுறிகளை ஆரம்ப காலத்தில் வெளிக்காட்டும் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்யலாம். இப்போது பெண்களைத் தாக்கும் கருப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

🔻அடிக்கடி சிறுநீர் கழிப்பது பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருப்பதால், பல பெண்கள் இந்த அறிகுறியை புறக்கணிப்பதுண்டு. ஆனால் கருப்பை புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்று தான் அடிக்கடி சிறுநீர் கழிப்பது. அதுவும் கருப்பையில் உள்ள கட்டியின் அளவைப் பொறுத்து சிறுநீர் கழிக்கும் முறை அதிகரிக்கும்.

🔻ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கு, மாதவிடாய் அல்லாத நாட்களில் இரத்தப்போக்கு போன்றவை கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது. வழக்கமான மாதவிடாயை சந்திக்கும் பெண்கள் திடீரென்று ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்தித்தால், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

🔻மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்ட பின் வயிற்று உப்புசத்தை சந்திப்பார்கள். ஆனால் அந்த வயிற்று உப்புசத்தை ஒரு பெண் நீண்ட நேரம் அனுபவித்தால், அந்த பெண்ணிற்கு கருப்பை புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.

🔻பெரும்பாலான பெண்கள் புறக்கணிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான கருப்பை புற்றுநோயின் அறிகுறி தான் முதுகு வலி. காரணமின்றி ஒரு பெண் முதுகு வலியை சந்தித்தால், அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

🔻கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடைய காணப்படும் பொதுவான அறிகுறிகள் தான் அடிவயிற்று வலி மற்றும் இடுப்பு வலி. அதுவும் இந்த வலியானது கடுமையானதாக இருக்கலாம் அல்லது பிடிப்பு போன்று இருக்கலாம். அதுவும் கட்டியின் அளவைப் பொறுத்து, அது உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

🔻கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பசியின்மை, அஜீரண கோளாறு, குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். எனவே திடீரென்று உங்களுக்கு இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால், அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்