கருப்பு பேரீச்சம் பழம் நன்மைகள்

கருப்பு பேரீச்சம் பழம் நன்மைகள்

கருப்பு பேரீச்சம் பழம் நன்மைகள்

⬛கோடை காலத்தை விட குளிர்காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் ஏற்படும் அந்த வகையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் நோய் கிருமிகள் நம்மை பாதிக்காமல் தடுக்கலாம் குறிப்பாக வைட்டமின்கள் நார்ச்சத்து தாதுக்கள் கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் போன்ற தமிழுக்கு தேவையான ஆத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது இது அனைத்தும் கருப்பு பேரிச்சம் பழத்தில் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் தினசரி காலையில் இந்த கருப்பு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

📍கருப்பு பேரீட்சைப்பழத்தில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. இவை குழந்தைக்கு ஏற்படும் அல்சைமர் நோய் வராமல் இருப்பதற்கு பேரீட்சைப்பழம் எடுத்து கொள்வது நல்லது. மூளையில் பிளாக் ஏற்படாமல் தடுப்பதற்கும் பேரீட்சைப்பழம் உதவுகிறது.

📍கருப்பு பேரீட்சைப்பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன, இது ஒரு வகை பாலிஃபீனால் எனப்படுகிறது. இவை இதய பிரச்சனை வராமல் பாதுகாக்கவும், இதய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

📍கருப்பு பேரீட்சைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் போன்ற சத்துக்கள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

📍இன்றைய காலகட்டத்தில் பல பெண்களும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் இந்த கருப்பு பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் தசை வீக்கத்தை குறைத்து மூட்டு வலி வீக்கம் போன்றவற்றிலிருந்து நாளடைவில் நிவாரணம் தர உதவுகிறது.

📍பொதுவாகவே குளிர்காலங்களில் நம் உடலில் வெப்பநிலை குறைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த கருப்பு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைய உதவுகிறது. மேலும் இந்த பேரிச்சம் பழத்தை தினசரி காலை மற்றும் மாலையில்  சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.

📍நம் எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பெரிதும் உதவுகிறது. அதனால் இந்த கருப்பு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாக வளர உதவும். அதே போல இந்த கருப்பு பேரிச்சம் பழத்தில் உள்ள பாஸ்பரஸ் காப்பர் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு சார்ந்த பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

📍கருப்பு பேரீட்ச்சைப்பழம் இரத்த சோகை தடுப்பது மட்டுமில்லாமல் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. மேலும் உடலில் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்வதற்கும் உதவுகிறது.

📍பேரீட்சைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குடல் அமைப்பை மேம்படுத்தி சீராக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கவும் உதவுகிறது.

📍கருப்பு பேரீட்சைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கருப்பு பேரீட்சைப்பழத்தில் 8 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் குடல் செய்லபாடுகளை மேம்படுத்த உதவுகிறது. ஆகவே நீங்கள் தினமும் எடுத்து கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளாலாம்.

📍கருப்பு பேரீட்சைப்பழத்தில் உள்ள அத்திவாசியமான வைட்டமின்கள் உள்ளது. இவை முடி உதிர்வதை நிறுத்தி முடி அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர உதவுகிறது.

கருப்பு பேரீச்சம் பழம் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்