கருப்பு பூனைகளை தற்காலிகமாகத் தத்தெடுக்க தடை
வடகிழக்கு கட்டலோனியாவில், விலங்குகள் காப்பகங்களிலிருந்து கருப்பு பூனைகளை தற்காலிகமாகத் தத்தெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாலோவீன் (Halloween) காலத்தில் நிகழக்கூடிய “அமானுஷ்ய சடங்குகள்” மற்றும் தீய செயல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உள்ளூர் விலங்கு நலச் சேவை (animal welfare service), குறித்த பூனைகள் காயப்படுத்தப்படுவதையோ அல்லது வினோதமான பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதையோ தடுக்க, ஒக்டோபர் 6 முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை கறுப்புப் பூனைகளை வளர்ப்பதற்கோ அல்லது தத்தெடுப்பதற்கோ வரும் அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேற்கத்திய கலாசாரத்தில் கறுப்புப் பூனைகள் பொதுவாக சூனியத்துடனும் துரதிர்ஷ்டத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டாலும், ஜப்பான் மற்றும் எகிப்து போன்ற பல கலாசாரங்களில் அவை செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.