கருங்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல்

கருங்கடலில் 29 பணியாளர்களுடன் பயணித்த 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய்க் கப்பல் இரண்டாகப் பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது டேங்கர் கப்பலும் புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இழுவைப் படகுகள், உலங்கு வானூர்திகள் மற்றும் 50ற்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பாவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்