
கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வை வழங்காத சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக வைத்தியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியரின் நடவடிக்கையினால் சில வைத்தியர்கள் வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
