கராபிட்டிய அனர்த்தம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு

காலி – கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை காலி – கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில்இ குறித்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூவரில் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்தார்.