
கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது
கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்ஓவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கணேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 1,080 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
