கம்பளையில் 3 பெண்களுக்கு நேர்ந்த சம்பவம்

கம்பளை, தொழுவ பகுதியில் சிற்றூந்து மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பதிவாகியிருந்தது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிற்றூந்து சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்கள் விகாரைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியின் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த சிற்றூந்து, பாரவூர்தியின் மீது மோதியதில் , குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்கள் 67 – 70 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சம்பவத்தில் காயமடைந்த சிற்றூந்து சாரதி காவல்துறை பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.