கமலா ஹரிஸ் பக்கம் வலுக்கும் ஆதரவு : டொனால்ட் டிரம்ப் நெருக்கடியில்?

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் வாக்காளர் மத்தியில் பலத்த ஆதவை பெற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகட்சியினர் மத்தியில் வேகமாக தனது ஆதரவை பெற்று வருகிறார் என்றும் இதனால் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்றும் ரொய்ட்டர்ஸின் கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது.

அத்துடன் ஜூலை 22 முதல் 23ம் திகதிக்குள் ரொய்ட்டர் பதிவு செய்துள்ள கருத்துக்கணிப்பில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கமலாஹரிசிற்கு 44வீத ஆதரவும் டொனால்ட் டிரம்பிற்கு 42 வீத ஆதரவும் காணப்படுகின்றது

இதேவேளை வாக்காளர்களில் 84 வீதமானவர்கள் ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதை வரவேற்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்