கப்பம், கடத்தல், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இப்போது சின்னத்தை திருடி விட்டார்கள் – சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரின் பொதுவான சின்னத்தை திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள். திருடுவது என்பது அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையாகவே வந்துள்ளது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்தி விட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இப்படியானவர்களை மக்கள் இனம் கண்டு ஓரம்கட்ட வேண்டும்.

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் கொள்கை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து வெளியேறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளியேறுவதாக இருந்தால் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம்.

தேர்தல் காலங்களில் வெளியேறுபவர்கள் குறித்து மக்களுக்கு அவதானம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.