கனி மீது வாள்வெட்டு தாக்குதல்

ஆவா குழுவைச் சேர்ந்த  அளவெட்டி ” கனி ” என்பவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றிருந்த இவரை பின்தொடர்ந்து , 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.