-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் ,கிண்ணியா பகுதியில் கனமழை காரணமாக விதைத்து ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதி விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
தம்பலகாமம் கோயிலடி தாயிப் நகர் வீதியை அண்மித்த பகுதி வயல் நிலங்கள் மற்றும் கிண்ணியா சூரங்கல் கற்குழி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களே இவ்வாறு மூழ்கியுள்ளன.
பெரும்போக நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஓரிரு நாட்களின் பின் கனமழை பெய்ததால் பல ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
தற்போது சில பகுதிகளில் நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
கனமழை காரணமாக நீரில் மூழ்கிய வெள்ள நீர் படிப்படியாக வடிந்தோடுகிறது அதன் பின்னரே சேத விபரங்கள் தெரியவரலாம்.



