-மூதூர் நிருபர்-
பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை-தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தோப்பூர் உப பிரதேச செயலப் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்பகுந்துள்ளது.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு தோப்பூர் பிரதேசத்திலுள்ள கிரான்வெளி, புதுவெளி பகுதிகளில் செய்கைபண்ணப்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கிக் வெள்ளக் காடாக காட்சி தருகிறது.
இதுவரை இடப்பெயர்வுகள் பதிவாகவில்லை.





