கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்திக் கொள்வதாக ட்ரம்ப் அறிவிப்பு!

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் தொடர்பில் எதிர்மறையாகப் பேசியதாக வெளியான விளம்பரத்தை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அறிவிப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

மோசமான நடத்தையின் அடிப்படையில்கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக குறித்த சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.