
கனடாவில் முடங்கியது அஞ்சல் சேவை
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் கனடா அஞ்சல் ஊழியர்களின் பணிநிறுத்தத்தால், ஊழியர்களும் அந்த சேவையை நம்பும் வணிகங்களும் நிச்சயமற்ற தன்மையுடன் போராடி வருகின்றன.
வீட்டிற்கான அஞ்சல் விநியோகத்தை நிறுத்துதல் மற்றும் சுமார் 4,000 கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களை மூடுவதற்கான தடை உத்தரவை நீக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் மாற்றங்களை எதிர்த்து கனடா அஞ்சல் ஊழியர் சங்கம் (CUPW) செப்டம்பர் பிற்பகுதியில் நாடு தழுவிய பணிநிறுத்தத்தை தொடங்கியது.
55,000 அஞ்சல் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடா அஞ்சல் ஊழியர் சங்கம் , ஒக்டோபர் 11ஆம் திகதிக்குள் சுழற்சி பணிநிறுத்த முறைக்கு மாறியது.
இதனால் பெரும்பாலான இடங்களில் அஞ்சல் சேவை மீட்கப்பட்டது.
அத்துடன் பழங்குடி சமூகங்களுக்கு அஞ்சல் சேவை ஒரு ‘உயிர்நாடி’ என்பதால், இந்தத் தாமதங்கள் அவர்களுக்கு மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
