கனடாவில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்!

கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக துஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை பெண் நியமிக்கப்பட்டுள்ளார்

இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் வில்லியம்ஸ் ஆவார்.

கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ்  தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு மகளீர் கல்லூரியில் கற்றார்.

இதன் பின்னர் 1991 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்