
கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்தி கொலை!
கனடா – சர்னியாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குராசிஸ் சிங் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கனடாவில் கல்வி வந்த நிலையில் கனடா – சர்னியாவில் குயின் தெருவில் உள்ள வீடொன்றில் இன்னும் சிலருடன் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி அதிகாலை அவர் தங்கியிருக்கும் வீட்டின் சமையலறையில் அவருடைய நண்பருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் குறித்த இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் 911 இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் க்ரோஸ்லி ஹன்டர் (வயது 36) என்பவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
