
கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு
கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
குறித்த கட்டுப்பாட்டு விதியானது இம்மாதம் நடைமுறைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவிக்கையில், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இப்படி வேலை செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது பொருளாதார ரீதியாக தங்களை பாதிக்கின்றதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
