கனடாவிற்குள் நுழைந்தால் நெதன்யாகு கைது – பிரதமர் மார்க் கார்னி உறுதி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை, அமுல்படுத்தும் முடிவைக் கைவிடுமாறு கனடாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர்.

எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் குறித்த கைது உத்தரவைப் பிறப்பித்தது.

தற்போது, இஸ்ரேல் – காசா போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அதேசமயம் நெதன்யாகுவிற்கு எதிரான கைது உத்தரவு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ‘தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு தடையாக இருக்கிறார்.

எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார்’ என கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியிருந்தார்.

ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.