கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு
கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு
-கிண்ணியா நிருபர்-
கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளருக்கும், திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கிண்ணியா மீடியா போரத்தின் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடை பெற்றது.
கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்தி, திருகோணமலை மீடியா போரத்தில் தலைவர் எச்.எம். ஹலால்தீன், மற்றும் கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளரின் பாரியார் திருமதி சக்தி, இலங்கைக்கான என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளர் ஜீவேந்திரன் முதலானோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மூதூர்,சம்பூர்,பட்டி திடல், கணேசபுரம், சேனையூர், பாட்டாளிபுரம் முதலான இடங்களில் வசிக்கும் மீள்குடியேற்ற மக்களுக்கான வாழ்வாதார வசதிகள், கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவிகள், விதவை, அனாதைகளுக்கான உதவிகள் வழங்குவது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டன.
ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை நவீன உலகத்திற்கு ஏற்ப அவர்களை ஈடுபடுத்துவதற்கான வழிகளை மேற்கொள்ளல், ஊக்கி வித்தல், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் முதலான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மீடியா போரத்தின் தலைவரினால் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News