கந்தானையில் மற்றுமொரு இரசாயனப் பொருள் மீட்பு

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கந்தானை பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த இரசாயனப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேநேரம் தங்காலை நெடோல்பிட்டிய பகுதியில் ஐஸ் ரக போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயன பொருள்கள் நேற்று கைப்பற்றப்பட்டன .

சம்பவம் தொடர்பில் தங்காலை பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது