​கந்தளாய் பொலிஸ் பிராந்தியத்தின் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடமையேற்பு!

-மூதூர் நிருபர்-

​கந்தளாய் பொலிஸ் பிராந்தியத்தின் பிரிவு மூன்றுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக (ASP) நியமிக்கப்பட்ட, கே.எம்.டி. பண்டார உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

​இதற்கான நிகழ்வு, சேருநுவர பொலிஸ் நிலையத்தில் அனைத்து மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

​புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார, கந்தளாய் பிராந்தியப் பிரிவுக்குட்பட்ட சேருநுவர, ஈச்சளம்பற்று மற்றும் சூரியபுரம் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

​மேலும், இவரது பணிகளை இலகுபடுத்தும் வகையில், இதற்கான பிராந்தியக் காரியாலயம் ஒன்றும் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினமே திறந்து வைக்கப்பட்டது.

​இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட, கந்தளாய் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டார, புதிய அலுவலகத்தின் வசதிகள் குறித்தும் பார்வையிட்டார்.

சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஈச்சலம்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், சேருநுவர பொலிஸ் பிரிவின் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

​கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.டி. பண்டார , தனது பணிக்காலத்தில் இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்திச் செயல்படப் போவதாகவும், அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.