கந்தளாய்க்கு நீர் வழங்கல் அமைச்சர் விஜயம்
-மூதூர் நிருபர்-
நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க, கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சர் தனது விஜயத்தின்போது, நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.
சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கந்தளாய் பிரதேச சபை தலைவர், மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

