
கந்தளாயில் தொலைபேசி கோபுரம் வீழ்ந்து தபாலகத்துக்கு சேதம்
-கிண்ணியா நிருபர்_
திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது. பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் அருகாமையில் உள்ள தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது.
தபாலக கட்டிடத்துக்கு மேலாக இக் கோபுரம் வீழ்ந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

