கந்தக்காடு முகாம் சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கைது

பொலநறுவை-கந்தக்காடு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 600க்கும் மேற்பட்டோர் தப்பியோடியிருந்தனர்.

இந்நிலையில், 667 பேர் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 57 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.