
கண்ணிவெடி விபத்தில் நான்கு பணியாளர்கள் படுகாயம்
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தங்கராசா ராஜேஸ்வரி (வயது – 43), கதிரேசு கவிகலா (வயது – 40), கிஷோர் மோகனாம்பாள் (வயது – 39), சிவரூபன் தமிழினி ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
