கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார்