கண்ணாடிவிரியன் பாம்பு கடித்து பாம்புப்பிடி வீரர் உயிரிழப்பு

இந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புப்பிடி வீரர் அந்த பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து பைக்குள் போட்டு எடுத்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக தடுக்கி விழுந்ததாகவும், கீழே விழுந்த பையிலிருந்து வெளியே வந்த பாம்பு அவரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாம்பு கடிந்த 5 நிமிடங்களுக்குள் அவர் அங்கேயே உயிரிழந்த நிலையில, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்