
கண்டெய்னர் கப்பல் கடலில் மூழ்கி விபத்து
கேரளாவில் கொச்சி துறைமுகத்தை நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த கண்டெய்னர் கப்பல் திடீரென கடலில் மூழ்கியதுடன் அதில் சிக்கிய மாலுமிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
184 மீற்றம் நீளம் கொண்ட லைபீரியா கொடி கட்டிய கண்டெய்னர் கப்பல் முன்தினம் வெள்ளிக்கிழமை விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
நேற்று சனிக்கிழமை கொச்சி துறைமுகம் வந்தடைய வேண்டிய நிலையில், கொச்சியின் தென்மேற்கு பகுதியில் 38 மைல் தொலைவில் கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது.