
கண்டி எசல பெரஹெரா : விசேட தொடருந்து சேவைகள்
எதிர்வரும் 25ம் திகதி முதல் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவிற்காக விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு, கோட்டை, மாத்தளை, நாவலப்பிட்டி மற்றும் பதுளை ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து கண்டிக்கு தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
