கண்டியில் கோர விபத்து: பெண் மரணம்

கண்டி, மினிப்பே பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் எதிரே வந்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்துடன் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.