கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயில் பயணிகளுக்கு இன்று முதல் விசேட பஸ் சேவை
கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயில் பயணிகளுக்காக இன்று (08) முதல் விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
விசேட பஸ்ளில் ரயில் பருவச் சீட்டினை (Train Season Ticket) பயன்படுத்திப் பயணிக்கும் வசதி உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்.
தற்போது, பிரதான மார்க்கத்திலான பஸ் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை மாத்திரமே இயக்கப்படுகின்றன.
கடுகண்ணாவ பகுதியில் இன்னும் பாதை தடைப்பட்டுள்ளதால், கண்டி, கட்டுக்கஸ்தோட்டை, கலகெதர, ஹதரலியத்த, ரம்புக்கனை, கேகாலை ஊடாக கொழும்பு வரை பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
