
கண்காணிக்க வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடமே சீண்டல் செய்தவர் கைது
நுவரெலியாவில் பேருந்தில் சிவில் உடையில் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடையாற்றும் 44 வயதுடைய அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடு தழுவிய யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
