கணேமுல்லையில் தங்கக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கிரிபத்கொட பகுதியில் நேற்று சனிக்கிழமை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவால் சுமார் 6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 20 கணேமுல்லவில் இந்தக் கொள்ளை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

17 மற்றும் 20 வயதுடைய சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் கெண்டலியத்தபலுவவையைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்களிடம் இருந்து உருக்கப்பட்ட 121 கிராம் 350 மில்லிகிராம் எடையுள்ள தங்க நகைகளையும், 17 கிராம் 15 மில்லிகிராம் எடையுள்ள இரண்டு தங்கக் கட்டிகளையும் புலனாய்வாளர்கள் மீட்டனர்.

மேலும்இ மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.