கணவன் தாக்கியதால் 4 மாத குழந்தையை அநாதையாக விட்டு சென்ற இளம்தாய்!

-யாழ் நிருபர்-

யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர், தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.

கட்டுடை,  அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 4 மாத குழந்தையின் தாயான யோ.நாகராணி (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும், கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கணவன் அவரை தாக்கியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.