கணவனை பிரிந்து கைக்குழந்தையுடன் வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த முடிவு

பொலன்னறுவை யுத்கனாவ பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தின் போது அந்த இடத்தில் இருந்த மனைவியின் தந்தை மற்றும் ஒன்றரை மாத குழந்தை ஆகியோரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தாயான லசந்த சண்டமாலி (27 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவருடன் மெதிரிகிரிய பிரதேசத்தில் வசித்து வந்த இவர், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் யுதகனாவவில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், கணவரும் வீட்டிற்கு வந்துள்ளார், அங்கு அவருடன் வாக்குவாதம் முற்றி, கணவன் அவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் கணவன் அதே மண்வெட்டியால் மனைவியின் தந்தையையும் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது, ​​ஒன்றரை மாத குழந்தையும் அந்த இடத்தில் இருந்துள்ளதுடன், குழந்தைக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கொலையை செய்த கணவர் பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹிகுராகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்