கணவனை சங்கிலியால் கட்டி வைத்துவிட்டு ஆணுறுப்பை வெட்டிய மனைவி

புதுவிதமான உடல் உறவு எனத் தெரிவித்து கணவரின் கை கால்களை சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்து விட்டு அவரது ஆணுறுப்பை மனைவி வெட்டி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்துள்ள நிலையில் 15 வயதுடைய உறவுப் பெண்ணுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவத்தினால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்து விட்டு பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார்.

வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டு அதனை கழிவறைக்குள் வீசியுள்ளார்.

இதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு தான் செய்த சம்பவத்தை தெரிவித்துள்ளார் இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கை பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

ஆணுறுப்பை கழிவறையில் எதற்காக புதைத்தீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, அதனை மீண்டும் சத்திரசிகிச்சை மூலம் ஒட்ட வைத்து விட முடியும். இதனைத் தடுக்கத்தான் கழிவறைக்குள் வீசினேன் என மனைவி பதிலளித்துள்ளார்.