
கணக்காளரை கடத்தி தனது கணக்கில் பணத்தை வைப்பிலிட்ட பெண்
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த எழுபது வயதுடைய கணக்காள கடத்திச் சென்று, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 1,500,000 பணத்தை தனது வங்கிக்கணக்கு மாற்றிக்கொண்ட பெண் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கணக்காளருக்குச் சொந்தமான காணி விற்பனைக்கு இருப்பதை அறிந்த பெண் உள்ளிட்ட குழுவினர் வேனில் வந்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பணம் மாற்றப்பட்டதை அடுத்து, அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுஇ அப்பெண் தலைமையிலான குழுவினர் தலைமறைவாகிவிட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் மற்றும் குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
