கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023 ம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையின் கீழ் இடம் பெற்ற இக் கூட்டத்தில் முதலாவது காலாண்டின் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் சூம் இணைய வழி தொழில் நுட்பம் ஊடாக இணைந்து கொண்டதுடன்,தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் வை. B.நிசார், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் , கணக்காளர் செல்வதாஸ், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதேச செயலக கணக்காய்வு உத்தியோகத்தர் ரொசான், கிளைத் தலைவர்கள்,வெளிக் கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்