கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதி

கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் இவர் தெரிவிக்கையில்,

தேல்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருகின்றனர் எனினும் இந்த திட்டத்தின் கீழ் ‘பிரெய்லி’ முறையில் அச்சிடப்பட்ட கட்சிகளின் பெயர்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய காகிதம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதால் அவர்களே தங்களது வாக்குகளை அளிக்க முடியும் என கூறினார்.

இதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் கட்புலனற்றோர், தனித்து வாக்களிக்கும் உரிமையை அனுபவிக்க முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.