
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கொள்ளை
-கிளிநொச்சி நிருபர்-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு கட்டைக்காடு ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் இரு தினங்களாக கூடியிருந்தார்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சரியாக 1.30 மணியளவில் கப்பலேந்தி மாதாவின் நகைகள் களவு போயுள்ளது.
ஆலயத்திற்கு வந்த சிலர் குறித்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியுற்று அவ் ஆலய குருமுதல்வருக்கு சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
