கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து : இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!
கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் பாட்னாவில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
மேலும் இவ்விபத்தில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
மேம்பால கட்டுமான பணியின் போது லோகோ செயின் அறுந்து விழுந்ததில் இவ்விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
