கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து: 2 பேர் காயம்

-பதுளை நிருபர்-

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறியொன்று ஹப்புத்தளை வெலிமடை வீதியின் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறையிலிருந்து ஹப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி இறக்கி விட்டு ஹட்டன் நோக்கிச் சென்ற லொறியே கட்டுப்பாட்டை இழந்து  நேற்று வியாழக்கிழமை இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறி விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இடத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன்இ செங்குத்தான மற்றும் வளைவுகள் கொண்ட வீதியால் இந்த இடத்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்